×

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு பேச வேண்டும்: வைகோ, அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 15வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளன. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், தைத் திருநாளை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு தொழிற்சங்கங்களுடன் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காண வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி அறிக்கை: போக்குவரத்துக் கழகங்களுடன் நடந்த முத்தரப்பு பேச்சுகள் தோல்வியடைந்து விட்ட நிலையில், வரும் 9ம் முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. பொங்கல் திருநாளுக்கு 6 நாட்கள் முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே, போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகளை இயன்ற வகையில் நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

The post போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு பேச வேண்டும்: வைகோ, அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Vaiko ,Anbumani ,CHENNAI ,Madhyamik ,General Secretary ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...